Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிணத்தை எரிக்க விறகுகள் பற்றாக்குறை: வனத்துறைக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (07:47 IST)
பிணத்தை எரிக்க விறகுகள் பற்றாக்குறை: வனத்துறைக்கு கடிதம் எழுதிய முதல்வர்!
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவும் மாநிலங்களில் ஒன்று டெல்லி என்பதும் டெல்லியில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தம் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
24 மணி நேரமும் டெல்லி சுடுகாட்டில் பிணங்கள் எரிந்து கொண்டிருப்பதாகவும் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்று சுடுகாடாக மாற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் உயிரிழந்த உடல்களை எரியூட்ட விறகுகளுக்கு தற்போது அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வனத்துறை உதவியை நாட அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் முடிவு செய்து இதுகுறித்து டெல்லி மேயருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி மேயர் இதுகுறித்து வனத் துறைக்கு கடிதம் எழுதி அதிகமான விறகுகளை கிடைக்க ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தற்போது பிணங்களை எரிக்க விறகுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments