Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காஸா நிலை நமக்கும் ஏற்படும்: ஃபரூக் அப்துல்லா

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:28 IST)
பாகிஸ்தான் உடன் பேச்சு வார்த்தை  நடத்தாவிட்டால் காஸா நிலமைதான் ஜம்மு காஷ்மீருக்கு ஏற்படும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் பிரச்சனை என்பது பல வருடங்களாக இருந்து வருவதாக கூறிய ஃபரூக் அப்துல்லா. ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்படும் போது, இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் எச்சரிக்கை எடுத்துக் கொள்கின்றனர்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் போர் வந்தபோது போர் அமைதி பேச்சு வார்த்தை மூலம் சரிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறிய நிலையில் பாகிஸ்தான் உடனும் அவர் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் ஜம்மு காஷ்மீரில் காசா நிலை தான் ஏற்படும்.  

பிரதமர் மோடி ஏன் பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தைக்கு மறுக்கிறார் என்று புரியவில்லை. பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காசா நிலையை நாம் சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்..

ஆனால் ஃபரூக் அப்துல்லா பேச்சுக்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஒருவர் இதற்கு முன்பு நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாரான போது பாகிஸ்தான் முதுகில் குத்தினர். இந்த ஆட்சி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு தலைகுனியாது என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments