Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா நிறைவேற்றம்: எதிர்ப்புகள் என்ன ஆச்சு?

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (16:36 IST)
மாநிலங்களவையிலும் வேளாண் மசோதா நிறைவேற்றம்
மத்திய அரசு சமீபத்தில் வேளாண் மசோதாக்கள் கொண்டு வந்தபோது அதனை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இருப்பினும் மக்களவையில் பாஜகவுக்கு முழு மெஜாரிட்டி இருந்ததால் அந்த மசோதா மக்களவையில் வெற்றிகரமாக குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது 
 
மேலும் அதிமுக உள்பட கூட்டணி கட்சிகளும் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தன என்பதும் சிரோமணி அகாலி தளம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கூட்டணி கட்சியான அதிமுக உள்பட ஒரு சில கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் வேளாண் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது 
 
இதனை அடுத்து மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் வேளாண் மசோதா நிறைவேறி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. திமுக எம்பி திருச்சி சிவா கோரிய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும், வேளாண் திருத்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்ப்பட்டதை அடுத்து நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
மாநிலங்களவையில் மசோதாக்கள் நிறைவேற போதுமான எம்பிக்களின் பலம் இல்லாத நிலையிலும் பாஜக அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments