ஜே.இ.இ தேர்வில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (17:59 IST)
அடுத்தாண்டு ஜனவரி 24 முதல் 31 ஆம் தேதி வரை ஜே இ இ தேர்வு நடக்கவுள்ளது. இதற்காக  டிசம்பர் 15 முதல் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

இத்தேர்வில் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் அல்லது கிரேட் வகைகளை குறிப்பிட வேண்டும் என அறிவித்தது.

ஆனால், மா நில பாடத்திட்டத்தில் ஆல் பாஸ் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழில்  கிரேட் மற்றும் மதிப்பெண் குறிப்பிடவில்லை. இதனால், மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில்,10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசு  கோரிக்கை விடுத்தது.

ALSO READ: ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.!
 
இந்த நிலையில், ஜே.இ.இ 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகர் மன்சூர் அலிகான் திடீரென காலவரையறையற்ற உண்ணாவிரதம்.. என்ன காரணம்?

ஐரோப்பிய நாடுகளுடன் போர்!.. ரஷ்ய அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!...

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ. 90-ஐ எட்டியது.

சென்னையில் நீடிக்கும் மழை.. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகள்.. தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்..!

பானிபூரிக்கு ஆசைப்பட்டு ஓப்பனான வாய்!.. மூட முடியாமல் தவித்த பெண்!...

அடுத்த கட்டுரையில்
Show comments