Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கட், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வு! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (10:09 IST)
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்த நிலையில் லாரிகள் உள்ளிட்ட வாகன வாடகை உயர்ந்தது. அதை தொடர்ந்து பல்வேறு பொருட்களும் விலையேற்றம் கண்டுள்ளன.

இந்நிலையில் அதை தொடர்ந்து தற்போது தங்கள் நிறுவன பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்துஸ்தானி யூனி லிவர் தனது சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 12% வரை விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பார்லே பிஸ்கட் நிறுவனம் தனது பிஸ்கட்டுகள் விலையை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாகவும், பிரிட்டானியா 7 முதல் 10 சதவீதம் விலை உயர்த்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள், நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு எடுத்துள்ளன.

 அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலை காரணமாக போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரத்தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments