Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிலக்கை மீறியதாக ஒரு கிராமத்திற்கே அபராதம்!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (10:48 IST)
மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரின் கிராமம் ஒன்றின் வீடுகளில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, அக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

 
பீகார் மாநிலத்தில், புதிதாக திருத்தப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தில், ஒரு கிராமத்தில் ஓரிருவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருந்தாலும் அந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் நாளந்தா மாவட்டத்தின் கைலாஷபுரி கிராமத்தில் உள்ள வீடுகளில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.எம். தியாகராஜன் அபராதம் விதித்துள்ளார்.
 
மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட இஸ்லாம்புரி தொகுதியில் உள்ள 50 குடும்பத்திற்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் மதுவிலக்கை மீறினால் அவர்கள் சொத்துக்கள் முடக்கப்படும் என்ற விதியின் அடிப்படையில், மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 ஹோட்டல்களின் சொத்துக்களை முடக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments