Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரத்தில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு

Webdunia
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (16:40 IST)
நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்டமாக நாகாலாந்து, மிசோரம் , மேகாலயா ஆகிய மாநிலங்களில் நாளை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் மிசோரமில் நாளை நடக்கவிருந்த வாக்குப்பதிவு, வருகிற 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
திரிபுராவுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது என்று கோரி மிசோரமில் தன்னார்வ அமைப்பினர் நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
போராட்டம் காரணமாக தேர்தல் பணிகள் முடங்கிவிட்டதால் நாளை நடைபெறவிருந்த வாக்குப்பதிவு, வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

ஹரியானா தேர்தல்.. காங்கிரஸ் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?

இயற்பியல் நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு.. செய்த சாதனை என்ன?

Show comments