Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பயோபிக் டிரைலருக்குத் தடை – தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு !

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (10:51 IST)
மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’பாகினி’ படத்தின் டிரைலரை இணையதளங்களில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பாகினி படம் மே 3 ஆம் தேதி ரிலிஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து 3 நாட்களில் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை இணையதளங்களில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மோடி படத்தின் வெளியீடு சம்மந்தமாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மே 23 ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடியும் வரை அரசியல் கட்சி தலைவர்களின் வரலாற்றுப்படம் அல்லது தேர்தலைப் பாதிக்கும் வகையி உள்ள படங்கள் இணையதள ஊடகங்களில் வெளியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments