Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க cVigil App! – தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (17:42 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை cVigil செயலி மூலமாக தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 5 மாநிலங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகளை மீறி நடைபெறும் பணப்பட்டுவாடா, பரிசு பொருள் விநியோகம் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தேர்தல் கட்டுப்பாட்டு மீறல் புகார்களை மக்களே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க cVigil செயலி கடந்த தேர்தலின்போதே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு மக்கள் தேர்தல் புகார்களை இந்த செயலி மூலம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த தேர்தலிலும் மக்கள் தேர்தல் புகார்களை இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments