Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளூடூத் மூலம் கள்ள ஓட்டு: குஜராத் தேர்தலில் கோல்மால்??

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (21:50 IST)
குஜராத்தில் இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து வரும் 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
 
இரண்டு கட்ட வாக்குபதிவு முடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், சூரத், ராஜ்கோட் மற்றும் கொசம்பா பகுதிகளில் வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. 
 
இதனால், பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வேறு இயந்திரங்கள் விரைவாக மாற்றப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனையடுத்து ப்ளூடூத் மூலம் கள்ளநோட்டு போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதையடுத்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் பூத் ஏஜென்டின், இன்டெக்ஸ் செல்போனின் ப்ளூடூத் பெயரைத்தான் தப்பாக புரிந்துகொண்டனர் என விளக்கமளித்துள்ளனர். 
 
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை புரோகிராம் மூலம் மாற்றிவிட முடியும் என்பது நீண்டகாலமாக இருக்கும் குற்றச்சாட்டு. உத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலில் இந்த மோசடியின் காரணமாகதான் பாஜக வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments