Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் ரூ.815 கோடி பணம், பரிசு பறிமுதல்! – தேர்தல் ஆணையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:36 IST)
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதுவரை ரூ.815 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு முன்னதாக தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலாக தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களிலும் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பரிசோதனை மேற்கொண்டு வந்தனர். தேர்தலுக்காக முறைகேடாக கொண்டு செல்லப்படும் பரிசு பொருள், ரொக்கம் ஆகியவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் இதுவரை 5 மாநிலங்களிலும் மொத்தம் ரூ.815 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments