Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வாதிகாரி மோடிக்கு ஹிட்லரின் முடிவுதான்: இளங்கோவன் கடும் தாக்கு!

சர்வாதிகாரி மோடிக்கு ஹிட்லரின் முடிவுதான்: இளங்கோவன் கடும் தாக்கு!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2017 (14:53 IST)
பிரதமர் மோடியை சர்வாதிகாரி எனவும் அவருக்கு சர்வாதிகாரி ஹிட்லரின் முடிவு தான் எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


 
 
குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் கடும் போராட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை தடுக்க பாஜக தீவிரமாக செயல்பட்டது. இதனால் தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்ட அகமது பட்டேல் வெற்றி பெற்றது பாஜகவுக்கு பெரும் அடியாக அமைந்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் இளங்கோவன், மோடியின் எல்லா தில்லுமுல்லுகளையும் மீறி காங்கிரஸ் கட்சியின் அகமது பட்டேல் வெற்றி பெற்றதுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
 
மேலும் கூறிய அவர், இந்தியாவில் ராமராஜ்யம் அமைப்போம் எனக் கூறிக்கொண்டே ராவண ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சி மலர பல்வேறு மாநிலக் கட்சிகளைப் பலவழிகளில் மிரட்டி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறி வருகிறார்.
 
தொடர்ந்து இவ்வாறு செயல்படும் மோடிக்கு சர்வாதிகாரிகள் ஹிட்லரும், முசோலினிக்கும் முடிவில் ஏற்பட்ட நிலையை நினைவு கூற விரும்புகிறேன். மோடியால் ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ளது என கூறியுள்ளார்.
 
சர்வாதிகாரிகளான ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். முசோலினி இத்தாலிய புரட்சிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களது முடிவை மோடிக்கு இளங்கோவன் சுட்டிக்காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பெரியாருக்கு எதிராக அவதூறு.. இது ஒரு அரசியல் தந்திரம்! - சீமானுக்கு திருமாவளவன கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் 3 மாதங்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தருகிறாரா? வேகமாக பரவும் மோசடி லிங்க்..!

10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments