Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட் வீசி நாய் குட்டியைக் கொன்ற போதை ஆசாமி : ஆக்ராவில் கொடூரம்

Webdunia
சனி, 26 மார்ச் 2016 (17:49 IST)
தன்னைப் பார்த்துக் குறைத்த நாய்குட்டியின் மீது ஒரு போதை ஆசாமி ஆசிட் வீசிய சம்பவம் ஆக்ராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆக்ரா அருகே உள்ள ஹனுமன் நகர் என்ற இடத்தில், ஒரு நாய்க்குட்டி ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. மிகவும் துருதுருவென அங்கும் இங்கும் உலவி வந்த அந்த நாய்க்குட்டிகள், சம்பவம் நடந்த இரவு, அந்த தெரு வழியாக வந்த போதை ஆசாமியை பார்த்து குரைத்துள்ளது.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், தன் கையில் வைத்திருந்த ஆசிட்டை அந்த நாய்க்குட்டிகளின் மீது வீசினான். இதில் அந்த நாய்க்குட்டிகள் வலியால் துடிதுடித்து கதறி கத்தியது.
 
சத்தம் கேட்டு வந்த நாயின் உரிமையாளர், அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தார். இதைக் கேள்விப்பட்ட விலங்கு நல ஆர்வலர்கள், நாய்க்குட்டிகளை சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு நாய் குட்டி இறந்து விட்டது.
 
இதுகுறித்து நாயின் உரிமையாளர், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. எனினும் இதுபற்றி விசாரணை நடைபெற்று வருவதாக ஆக்ரா போலீசார் தெரிவித்துள்ளனர்.

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

Show comments