Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடிப்பது அடிப்படை உரிமை; இது சமூக அந்தஸ்துக்கான சின்னம்: பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய பேச்சு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (07:41 IST)
மது குடிப்பது அடிப்படை உரிமை என்றும் இது சமூக அந்தஸ்துக்கான சின்னம் என்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்ர் பாபுலால் கவுர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
 
மத்திய பிரதேச மாநில பாஜக அரசின் உள்துறை அமைச்சரான பாபுலால் கவுர், சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து கூறிவருபவர்.

85 வயதான இவர், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்.
 
இந்நிலையில் பாபுலால் கவுர் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். போபாலில் மது விற்பனை செய்யும் அதிகபட்ச நேரத்தை இரவு 10 மணியில் இருந்து 11.30 மணி வரையாக நீட்டிக்கும் நடவடிக்கை குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அவர், ‘மது குடிப்பதால் குற்றங்கள் அதிகரிக்காது. ஏனென்றால் மது குடித்தவுடனே சம்பந்தப்பட்ட நபர் தனது சுயநினைவை இழந்து விடுகிறார்.
 
அப்படியிருக்க எப்படி குற்றம் நிகழ முடியும்? அதேசமயம் அளவாக குடிப்பவரால் குற்றம் எதுவும் நிகழாது’ என்று கூறினார்.
 
மேலும் அளவாக மது அருந்துவது என்பது ஒருவரின் அடிப்படை உரிமை என்று கூறிய பாபுலால் கவுர், இது சமூக அந்தஸ்துக்கான சின்னமாகவும் தற்போது விளங்குவதாகவும் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments