Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட இளம்பெண்: கணவர் குடும்பத்தோடு கைது..!

Mahendran
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:35 IST)
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கணவர் குடும்பத்தாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது கணவர் குடும்பத்தை கூண்டோடு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நொய்டா என்ற பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விகாஷ் என்ற இளைஞருக்கு கரீஷ்மா என்ற பெண் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களில் இருந்தே வரதட்சணை கொடுமையால் அந்த பெண் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது
ஏற்கனவே 11 லட்சம் மதிப்புள்ள நகை, கார் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்ற நிலையில் கரீஷ்மாவுக்கு பெண் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி மேலும் சில லட்சம் ரூபாய் வரதட்சணை வேண்டும் என்று கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது

பெண் குழந்தை பிறந்ததால் அபராதமாக 21 லட்சம் கூடுதல் வரதட்சணை மற்றும் அதிநவீன சொகுசு கார் கேட்டு கரிஷ்மாவை அவருடைய கணவர் விகாஷ், மாமியார் கணவரின் சகோதரி மற்றும் சகோதரர்கள் கொடுமைப்படுத்திய நிலையில் ஒரு கட்டத்தில் கணவரின் குடும்பத்தினர் கரீஷ்மாவை அடித்து கொலை செய்ததாக தெரிகிறது

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் கரிஷ்மாவின் கணவர் விகாஸ் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டதாகவும், மாமியார் கணவரின் சகோதரி சகோதரர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

குஷ்பு கைது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments