Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்காதீர்: உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:33 IST)
ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் மருந்துகள் வாங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக மருந்துகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

]
 
 
கண்காணிக்கப்படாதா, தரமில்லாதா மருந்து பொருட்கள் ஆன்லைன் மூலமாக விற்கப்படுவதாக எஃப்டிஏ கூறியுள்ளது. ஆன்லைன் மூலமாக விற்கப்படும் மருந்துகளை கண்காணித்து, ஒழுங்குமுறைப்படுத்துவது எப்படி என்ற செயல்முறையை அரசு மேற்கொண்டு வருகிறது, அவர்களால் தற்போது மக்கள் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க முயற்சி எடுக்க முடியவில்லை.
 
மக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறியும் வாங்கினால் அந்த மருந்துகளுக்கான தரத்திற்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என எஃப்டிஏ மருந்துகளுக்கான துணை ஆணையர் பிஆர் மசல் கூறியுள்ளார்.
 
அரசாங்கம் இணையதளம் மூலம் நடைபெறும் மருந்து விற்பனை எனப்படும் இ-ஃபார்மசியை ஒழுங்குபடுத்தவில்லை என வேதியியல் சங்கம் கூறியுள்ளது. இது குறித்த குறிப்பாணையை அகில இந்திய வேதியியல் மற்றும் மருந்துகள் சங்கம் மத்திய மாநில சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.
 
மும்பையில் உள்ள 3500 வேதியியலாளர்கள் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிராக ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். ஆன்லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்தி, கண்காணித்து, ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்கள் ஆன்லைன் மருந்துகளை வாங்கவேண்டாம் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எனப்படும் எஃப்டிஏ வேண்டுகோள் விடுத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

Show comments