Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முதல் உள்நாட்டு சேவைகளும் ரத்து! தமிழகம் முழு முடக்கம்!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (09:38 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு தொடங்கியதையடுத்து கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சென்னை சர்வதேச நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. இதுவரை 350க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட உள்ளது.

உள்நாட்டில் மட்டுமே விமான போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த விமானசேவை நிறுத்தம் அமலாகும். இதனால் இலக்கை அடையும் விமானங்கள் அங்கிருந்து மீண்டும் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments