Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த குழந்தையை கடித்து தின்ற நாய்கள் – தெலுங்கானாவில் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (14:20 IST)
பிறந்து இரண்டு நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தலையில்லா முண்டமாக தெலுங்கானா வயல்பகுதியில் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மேதாக் மாவட்டத்தில் உள்ள ரெஜிந்தால் கிராமத்தில் ஒரு குழந்தை சடலம் கிடப்பதை அங்குள்ள பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த குழந்தை தலையும், இடது கையும் இல்லாமல் கிடந்தது. உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் சடலத்தை பார்வையிட்டனர்.

சடலத்தின் வலது கையிலும், கால் மற்றும் மார்பு பகுதிகளிலும் நாய்கள் கடித்து குதறிய அடையாளங்கள் தென்பட்டுள்ளன. சடலத்தை கைப்பற்றி உடனே பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருகில் உள்ள கிராமங்களில் பிறந்த குழந்தை ஏதாவது காணாமல் போயுள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கானாவில் பிறந்த குழந்தைகள் மர்மமான முறையில் இறந்துகிடப்பது அதிகரித்துள்ளது.

சமீபத்தில் இதேபோல ஹைதராபாத் அருகில் ஒரு பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று கால்வாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்து விரைந்து சென்றிருக்கின்றனர் போலீஸார். பெருச்சாளிகளால் பாதியளவு கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளது அந்த குழந்தை.

மாந்த்ரீகத்திற்காக இதுபோன்று குழந்தை பலிகளை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீஸால் எந்த ஒரு முடிவையும் எட்ட முடியவில்லை. எனவே இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என சப் இன்ஸ்பெக்டர் பாலஸ்வாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments