Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயிடமிருந்து தப்பிக்க மாடியிலிருந்து குதித்த இருவர் பலி

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (12:09 IST)
தங்களை துரத்திய நாயிடமிருந்து தப்பிப்பதற்காக, மூன்றாவது மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் பரிதாபாக பலியான சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது.


 

 
விசாகப்பட்டினத்தில் வசித்து வருபர் நரவா ராம்பாபு. அவர் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வருகிறார்.
 
சம்பவத்தன்று, அந்த நாய் தீடிரென அவரை அடிக்க வந்துள்ளது. இதையடுத்து நாயை விட்டு விட்டு அவர் ஓடியுள்ளார். அங்கும் இங்கும் ஓடிய அந்த நாய், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடிக்கு ஓடி, அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5 தொழிலாளர்களை துரத்தியுள்ளது. 
 
அதில், இருவர் மட்டும் ஒரு அறைக்குள் புகுந்து தப்பிவிட்டனர். மற்ற மூவரும், எங்கே தங்களை நாய் கடித்து விடுமோ என்று அஞ்சி, மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து உள்ளனர். அதில் இரண்டு பேர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments