Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடைந்த கிருஷ்ணர் சிலைக்கு கட்டுப்போட்டு சிகிச்சை செய்த மருத்துவர்கள்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (10:03 IST)
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கிருஷ்ணர் சிலை உடைந்த நிலையில் மருத்துவர்கள் அதற்கு பேண்டேஜ் போட்டு சிகிச்சை செய்த செயல் கவனத்தைப் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா மருத்துவமனைக்குக் கடந்த வெள்ளிக்கிழமை கையில் ஒரு பையோடு வந்த பூசாரி ஒருவர் வந்து மருத்துவர்களை திகிலடைய வைத்துள்ளார். அந்த பையில் தினமும் தன் வீட்டில் வணங்கும் கிருஷ்ணர் சிலை உடைந்த நிலையில் இருந்துள்ளது. பூஜை செய்யும் போது கிருஷ்ணரின் கை உடைந்துவிட்டதாகவும் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறி மருத்துவர்களிடம் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

மருத்துவர்கள் இதற்கு சிகிச்சை எல்லாம் அளிக்க முடியாது என்று எவ்வளவோ கூறியும் அவர் நச்சரிக்கவே, பின்னர் அவரை எப்படியாவது அனுப்ப வேண்டும் என்பதால் கிருஷ்ணர் பெயரை பதிவு செய்து உடைந்த கையை பேண்டேஜ் போட்டு ஒட்டி அனுப்பியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அதே சமயம் மருத்துவர்களின் அரிய நேரத்தை இப்படி மூட நம்பிக்கைகளுக்காக எடுத்துகொண்ட அந்த பூசாரிக்கு கண்டனங்களும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments