Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப் போன லட்டுக்களை திரும்ப பெற்றது திருப்பதி தேவஸ்தானம்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (10:14 IST)
பக்தர்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து கெட்டுப் போன லட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் திரும்ப பெற்றுள்ளது.
 

 

 
ஏழுமலையான் வீற்றிருக்கும் திருப்பதி மலை மிகப் பிரசித்தம். இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் ஏழுமலையானின் தரிசித்து செல்கின்றனர்.
 
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம், கட்டண முறையில் லட்டுக்களை பிரசாதமாக வழங்குகிறது. இதனிடையே நவராத்ரியை முன்னிட்டு 6 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப்பட்டன.
 
ஆனால் எதிர்பார்த்தபடி அதிக அளவிலான பக்தர்கள் வராததால், தயாரிக்கப்பட்ட 6 லட்சம் லட்டுக்கள் கெட்டுப் போனதாக தெரிகிறது.
 
இதனை அறியாத, கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு கெட்டுப் போன லட்டுக்கலை விநியோகித்துள்ளனர். பின்னர் இது குறித்து அறிந்த பொதுமக்கள் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட லட்டுக்கள் மீண்டும் திரும்ப பெறப்பட்டன.

திருப்பதியில் லட்டுக்கள் கெட்டுப் போன சம்பவமு, அதனை தேவஸ்தான நிர்வாகம் திரும்ப பெறப்பட்ட சம்பவமும் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments