Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

Mahendran
புதன், 1 ஜனவரி 2025 (10:34 IST)
திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் தனது உடலில் ஐந்து கிலோ தங்க நகைகளை அணிந்து வந்ததை பார்த்து, அந்த பகுதி மக்கள்  ஆச்சரியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், பெரும்பாலும் பக்தர்கள் மிகவும் எளிமையுடன் தான் சாமியை தரிசனம் செய்ய வருவார்கள். ஆனால், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவர், நேற்று திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
 
தெலுங்கானா மாநில ஒலிம்பிக் சங்க இணை செயலாளராக இருக்கும் இவர், தனது கழுத்தில் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்திருந்தார். கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய வந்த விஜயகுமாரை பார்த்த பலர் ஆச்சரியப்பட்டு, அவரை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர்.
 
ஒரு சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இது குறித்து விஜயகுமார் கூறும் போது, "தங்கத்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக ஐந்து கிலோ நகைகள் அணிந்து வந்தேன். ஆனால் இதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றும் கூறியுள்ளார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

புத்தாண்டில் தங்கம் வாங்க போறீங்களா? இன்று மட்டும் 320 ரூபாய் உயர்வு..!

சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments