Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் படுக்கைக்கு 10 பெண்கள் ; காம களியாட்டம் நடத்திய சாமியார்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (16:20 IST)
டெல்லியில் உள்ள ஒரு சாமியார் தன்னை கடவுள் கிருஷ்ணர் எனக் கூறிக்கொண்டு, பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
டெல்லியின் ரோகினி பகுதியில் ஆத்யத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரம் உள்ளது. அங்கு விரேந்திர தேவ் திக்‌ஷித் பல பெண்களை அடைத்து வைத்து பாலியல் பலாத்செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
 
அந்நிலையில், அந்த ஆசிரமத்திலிருந்து தப்பி வந்த ஒரு பெண் ஒரு பத்திரிக்கை அளித்த பேட்டியில், அந்த ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் அடைத்து வைத்து, அவர்களை சாமியார் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார். என்னையும் பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அங்கு ஒரு இருட்டு அறை உள்ளது. அதில் பல பெண்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி செய்தியை கூறினார். இதைத் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என ஒரு அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 
 
எனவே, ஆசிரமத்தை வீடியோ பதிவுடன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, போலீசாரும், பெண்கள் ஆணையம் மற்றும் குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த சிலரும் கடந்த 22ம் தேதி அங்கு சோதனையில் ஈடுபட்டனர். 
 
அப்போது அங்கு அடைக்கப்பட்டிருந்த 41 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த சாமியார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இவர் தன்னை பகவான் கிருஷ்ணன் எனக் கூறிக்கொண்டு 16000 பேரை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார். மேலும், தினமும் தனது படுக்கையில் 10 பெண்கள் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவாராம். அவரின் கொடுமை தாங்க முடியாமல் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. 
 
போலீசாரின் விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்