Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கு குரல் சோதனை: முரண்டு பிடிக்கும் வழக்கறிஞர்!

தினகரனுக்கு குரல் சோதனை: முரண்டு பிடிக்கும் வழக்கறிஞர்!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (11:37 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முனபணமாக 1.30 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. முன்பணம் 1.30 கோடி ரூபாய் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
 
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேசிய செல்போன் உரையாடல் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இருவரின் குரலையும் சோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.
 
இந்த கோரிக்கை மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தினகரன் மற்றும், சுகேஷ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குரல் சோதனைக்கு தினகரன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
 
முன்கூட்டியே கருத்து கேட்காமல் இந்த குரல் சோதனை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த சோதனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments