Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

Sinoj
சனி, 24 பிப்ரவரி 2024 (13:21 IST)
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எம்.எஸ்.சுவாமி நாதன் ஆணையத்தின் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க புதியசட்டம் இயற்றப்பட வேண்டும்,மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி விவசாயிகள்  முன்னேறி வருகின்றனர்.
 
மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கம் நடத்தியபேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்திற்கு விவசாயிகள் அணிதிரண்டு செல்கின்றனர்.
 
இவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே இப்போராட்டத்தில் பங்கேற்ற  இளம் விவசாயி உட்பட 4  பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஷம்பு எல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விவசாயில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
 
அதேபோல், பிரோஸ்பூர் மாவட்டம் மன்சூர் தேவன் கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் விவசாயி உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை  6 ஆக உயர்ந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments