Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை: முடிவுக்கு வருமா விவசாயிகள் போராட்டம்!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (08:02 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பஞ்சாப் ஹரியானா உள்பட ஒரு சில மாநிலங்களில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசு நடத்தியது. இதுவரை 5 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பதும் ஆனால் இந்த ஐந்து கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்வது ஒன்றே இந்த போராட்டத்திற்கு முடிவாக இருக்கும் என்று விவசாயிகள் தரப்பினர் தெரிவித்து வருவதால் இந்த போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 34 ஆவது நாளாக டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது 
 
இதனை அடுத்து நாளை ஆறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை விவசாயிகள் சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் நாளை ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டு விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments