Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2020 (09:20 IST)
கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏழை பணக்காரர், சாமானியர் விவிஐபி என எந்தவித பேதமும் இன்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஸ்பெயின் துணை பிரதமர் கர்மேன் கால்வோ உட்பட பல விவிஐபிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களுக்கு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மருத்துவர்கள் உலகம் முழுவதும் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களது சேவை மிகவும் மதிக்கத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது
 
இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வந்த டெல்லி மருத்துவர் ஒருவருக்கும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து மார்ச் 12 முதல் 16 வரை அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகளும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments