Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுங்க.. என்ன வேணா பண்ணுங்க.. ஆக்ஸிஜன் வரணும்! – மத்திய அரசுக்கு நீதிமன்றம் காட்டம்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (10:27 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் டெல்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு குறைவாக உள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் ”பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள்.. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என்று காட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments