Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிநீர் கூட்டத்திற்கு தலைமை வகித்த உமா பாரதிக்கு பிடிவாரண்ட்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (14:35 IST)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக்விஜய்சிங் தொடர்ந்த அவ தூறு வழக்கில், மத்திய அமைச்சர் உமாபாரதிக்குபோபால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

 
கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ரூ. 15 ஆயிரம்கோடி அளவுக்கு திக்விஜய்சிங் ஊழலில் ஈடுபட்டதாக உமாபாரதி குற்றம் சாட்டியிருந்தார்.
 
இது தொடர்பாக உமாபாரதி மீது திக்விஜய் சிங் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கிலேயே தற்போது உமாபாரதிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
காவிரிநீர் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில பிரதிநிதிகள் சார்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு உமா பாரதி தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உமா பாரதி மத்திய நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை?? - அதிர்ச்சி தகவல்!

திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கே ஏற்றது.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்..!

மைக் புலிகேசி.. சீமானை மறைமுகமாக கிண்டல் செய்த திருச்சி டிஐஜி வருண்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments