Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

Mahendran
திங்கள், 11 நவம்பர் 2024 (18:09 IST)
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை வழங்கி கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு உடலில் 67 காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது குறித்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்த போது, புகார் அளித்த சிறுமி தாயாரின் இரண்டாவது கணவர் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை விதித்து பத்தினம்திட்டா  நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

அடுத்த கட்டுரையில்