6,298 பேருக்கு கொரோனா… இன்றைய இந்திய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (10:04 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள்தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,298 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,22,774 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48,389 லிருந்து 46,748 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 23 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,273 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று ஒரு நாளில் 5,916 பேர் வீடு திரும்பினர். இந்தியாவில் இதுவரை 216.17 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,61,896 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழையால் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் ரத்து.. குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை..!

தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் குறைவு.. இன்னும் குறையுமா?

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை..!

X நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்: Grok AI பாதுகாப்பை மறுஆய்வு செய்ய உத்தரவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments