Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய தடை.. அஜித் பவார் அணிக்கு நீதிமன்றம் குட்டு..!

Mahendran
வியாழன், 14 மார்ச் 2024 (14:03 IST)
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணிக்கு சொந்தமானது என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் தற்போது கட்சியின் முழு கட்டுப்பாடும் அஜித் பவார் அணிக்கு கிடைத்துள்ளது என்பதும் அந்த கட்சியின் சின்னம் கொடி உட்பட அனைத்தும் அஜித் பவார் அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சரத் பவார் அணி தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்த நிலையில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

 சரத் பவார் புகைப்படத்தை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்று அஜித் பவார் அணிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் சரத் பவார் பெயர் புகைப்படத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி தர வேண்டும் என அஜித் பவார் அணிக்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சரத் பவார் அணி, தனி  அணியாக தற்போது செயல்பட்டு வரும் நிலையில் அந்த அணியின் தொண்டர்கள் மட்டுமே அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments