Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

Siva
செவ்வாய், 21 மே 2024 (15:33 IST)
சிங்கப்பூரில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை அதிகம் பரவல் வரும் நிலையில் இந்தியாவில் இதனால் எவ்வித பயமோ, பதற்றமோ தேவையில்லை என்றும், இந்த வகை தொற்று இந்தியாவில் ஏற்கனவே பதிவாகியுள்ளது என்றும்  பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
சிங்கப்பூரில் திடீரென கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளதாகவும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட அனைவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்ப்போம்.
 
சிங்கப்பூரில் மே முதல் வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் ஒவ்வொரு நாளும் 200க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இம்மாத இறுதிக்குள் சிங்கப்பூரில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தி உள்ளது.
 
இந்நிலையில் சிங்கப்பூரில் பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் உருமாறிய KP.2 வகை தொற்றால் இந்தியாவில் எந்தவித பாதிப்பும் இருக்காது என   பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments