Webdunia - Bharat's app for daily news and videos

Install App

35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு – எப்போது முடியும் கொரோனா காலம்?

Webdunia
சனி, 2 மே 2020 (08:43 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,752 லிருந்து 35,365 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,147 லிருந்து 1,152 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 8,889 லிருந்து 9,065 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 4,395 பேரும், டெல்லியில் 3,515 பேரும், ராஜஸ்தானில் 2,584 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,660 பேரும், தமிழகத்தில் 2,363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments