Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ’எத்தனை மாவட்டங்களில்’ கொரொனா பாதிப்பு இல்லை – லாவ் அகர்வால் தகவல்

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (17:08 IST)
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை இந்தியாவில் 12, 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1489 பேர் குணமடைந்துள்ளனர். 414 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த, இரண்டாம் கட்டமாக ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதிவ
ரை  நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் 6 முக்கிய மெட்ரோ நகரங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் அடக்கம். 

மேலும், 400 மாவட்டங்கள் பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 718 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் என்றும், 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் 325 மாவட்டங்களில் கொரொனா பாதிப்பு இல்லை என  தெரிவித்துள்ளார்.


மேகும், கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments