Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்; அனாதையான குழந்தைகள் எவ்வளவு பேர்? – தேசிய குழந்தைகள் ஆணையம் தகவல்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:47 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்தை குழந்தைகள் குறித்த விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்திருந்தன. இதனால் பலர் உயிரிழந்த நிலையில் குழந்தைகள் பலர் தாய், தந்தையரை இழந்தனர். இவ்வாறாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு ரூ.10 லட்சம் வைப்பு நிதியாக அளிப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி செலவை அரசு ஏற்பதுடன், ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் வரவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த விவரங்களை உச்சநீதிமன்றம் கேட்டதன் பேரில் தேசிய குழந்தைகள் ஆணையம் சமர்பித்துள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர். 7,464 குழந்தைகள் தாய், தந்தையில் யாரேனும் ஒருவரை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments