Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயில் திறப்பு விழா குறித்து சர்ச்சை பேச்சு..! பி.கே.ஹரிபிரசாத்தை கைது செய்ய கோரிக்கை..!!

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2024 (10:49 IST)
ராமர் கோவில் திறப்பு விழா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
 
வருகிற ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் 'கோத்ரா போன்ற சம்பவம்' நடக்க வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.ஹரிபிரசாத் சர்ச்சை கருத்து தெரிவித்தார். 
ALSO READ: கைதாகிறாரா டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..! டெல்லியில் உச்சகட்ட பதற்றம்..!!
2002 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு குஜராத்தை மிக மோசமான வகுப்புவாத கலவரங்களில் ஒன்றாக ஆழ்த்தியது என்று  அவர் கூறினார். எனவே, கர்நாடகாவில் அசம்பாவித சம்பவங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும்   கர்நாடக அரசு உஷாராக இருக்க வேண்டும் என்றும் பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தார்.  
 
இந்நிலையில் பிகே. ஹரிபிரசாத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் நக்வி முக்தர், வகுப்புவாத சதியின் புழுவாக காங்கிரஸ் மாறி வருகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.   ராமர் கோவில் திறப்பு விழா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஹரிபிரசாத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments