Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் யார் ? – தென் இந்தியருக்கு வாய்ப்பு !

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (15:41 IST)
காங்கிரஸ் சார்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தென் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் 350 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமாவை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வாரா எனத் தெரியவில்லை. அதனால் காங்கிரஸ் சார்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் சென்ற முறை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட மல்லிகார்ஜுனா கார்கே இம்முறை தோல்வி அடைந்துள்ளதால் அவருக்குப் பதிலாக தென் இந்தியாவைச் சேர்ந்த வேறு தலைவர்களை நியமிக்கும் யோசனையில் உள்ளனர். அதனால் கேரளா அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த யாராவது ஒருக் காங்கிரஸ் எம்பிக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments