Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியின் அடுத்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (07:30 IST)
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகம் அமைத்து வரும் காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது. ஏற்கனவே ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும் தொகுதிகள் உள்பட மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது ஆறாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு
 
1. கேரளா - ஆழப்புழா - திருமதி ஷானிமோல் உஸ்மான்
2. கேரளா - அட்டிங்கல் - அடூர் பிரகாஷ்
3. மகாராஷ்டிரா - நந்தூர்பார் - கே.சி.பாடவி
4. மகாராஷ்டிரா - துலே - குணால் ரோஹிதாஸ் பட்டீல்
5. மகாராஷ்டிரா - வார்தா - சாருலதா கஜாசிங்
6. மகாராஷ்டிரா - யாவட்மால் வாசிம் - மாணிக்ராவ் தாக்கரே
7. மகாராஷ்டிரா - மும்பை தெற்கு - ஏக்நாத் கெய்க்வாட்
8. மகாராஷ்டிரா - சிரிதி - பெளசாஹிப் காம்ப்ளே
9. மகாராஷ்டிரா - ரத்னகிரி - நவின்சந்திரா பண்டிவடேகர்
 
மேலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவைகளில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ராகுல்காந்தி வெளியிடுவார் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இன்றுதான் பாஜகவும் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments