Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியில் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என அம்ரீந்தர் நினைக்கிறார்- காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (17:11 IST)
பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய அம்ரீந்தர் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் பிறப்பித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களுக்கும், சித்து அவர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சித்து அம்ரீந்தர் சிங் எதிர்ப்பையும் மீறி நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது கட்சியில் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக எம் எல் ஏக்களை திரட்டி வருகிறாராம் சித்து. இந்நிலையில் கட்சியில் தனக்கு ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று மாலை கட்சி நிர்வாகிகள் கூடும் கூட்டம் நடந்தது. அதற்கு முன்னதாக ஆளுநரை சந்தித்த அம்ரீந்தர் சிங் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதையடுத்து அவர் பாஜக தலைவரான அமீத் ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ஹரிஷ் ராவத் ‘அம்ரீந்தர் சிங் தனது பண்ணை வீட்டில் இருந்து கட்சியை இயக்க வேண்டும் என நினைத்தார். நான் பலமுறை அவரை சந்தித்து ஆலோசனைகளை வழங்கினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. கட்சியில் யாருமே அவரை கேள்வி கேட்கக் கூடாது என அவர் நினைக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

தொட்டிலில் தூங்கிய 24 நாள் குழந்தை.. குரங்கு கடித்து குதறியதால் பெற்றோர் அதிர்ச்சி..!

19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!

மேற்கு வங்க ரயில் விபத்து..! பலி எண்ணிக்கை 15-ஆக உயர்வு..! மீட்பு பணி தீவிரம்..!!

பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் திடீர் ரத்து! என்ன காரணம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments