Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (09:19 IST)
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கு வலிய வந்து எஸ்டிபிஐ கட்சி ஆதரவளித்த நிலையில் அந்த கட்சியின் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை என காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆளும் கட்சி சிபிஎம் தலைமையில் ஒரு கூட்டணி, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஒரு கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என மும்முனைப் போட்டி இருக்கிறது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஆதரவாளிக்கிறோம் என எஸ்டிபிஐ அறிவித்திருந்த நிலையில் அந்த ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை என்று காங்கிரஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் அரசியல் முகமாக இருக்கும் எஸ்டிபிஐ கட்சியை கூட்டணியில் சேர்த்தால் பாஜக அதை தேசிய அளவில் நெகட்டிவ்வாக பிரச்சாரம் செய்யும் என்றும் சிபிஎம் கட்சியும் கேலி செய்யும் என்பதால் எஸ்டிபிஐ கட்சியின் ஆதரவு தேவை இல்லை என்று கேரள மாநில சிபிஎம் செயலாளர் எம் பி கோவிந்தன் என்பவர் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ரகசிய டீல் உள்ளது என முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டி உள்ள நிலையில் சிபிஎம் கட்சியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments