Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாசிச கட்சிகளுக்கு எதிராக போராட்டம்: காங்கிரஸ் புதிய தலைவரின் முதல் பேச்சு!

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:10 IST)
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று கூறியுள்ளார் 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே தனக்கு ஓட்டுப் போட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார் 
 
மேலும் வகுப்புவாத போர்வையில் ஜனநாயக மக்களை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் கட்சியில் சிறியவர் பெரியவர் என அனைவரும் கட்சி தொண்டர்களை போல் நாம் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன் என்றும் அவரை கட்சி சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூனே கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்கள் நள்ளிரவில் திடீர் கைது.. என்ன காரணம்?

நாளை முதல் 4 நாட்களுக்கு அரசியல் தான்: நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யும் விஜய்,..!

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments