Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு முடிவு எடுக்க தெரியவில்லை.. மூத்த தலைவர்கள் அதிருப்தி

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (12:28 IST)
மாநில கட்சிகளுடன் கூட்டணி விஷயத்தில் ராகுல் காந்திக்கு முடிவெடுக்கத் தெரியவில்லை என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தனது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து சோனியா காந்தி தற்காலிக பொறுப்பில் இருந்தார்.

எனினும் சோனியா காந்திக்கு உடல் நிலை பிரச்சனை இருப்பதனால் தற்போது வேறு தலைவரை நேர்ந்தெடுப்பதற்கான நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளதை தொடர்ந்து ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

எனினும் ராகுல் காந்திக்கு மீண்டும் தலைவராக சில மூத்த தலைவர்கள் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்களாம். அதாவது மோடிக்கு சவால் விடும் வகையில் ராகுலின் செயல்பாடுகள் இல்லை எனவும், ராகுலை சுற்றி இருப்பவர்கள் தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள் எனவும் கூறுகிறார்களாம்.

மேலும், மாநில கட்சிகளுடன் கூட்டணி விஷயங்களில் ராகுல் காந்திக்கு முடிவெடுக்க தெரியவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments