Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி.. அரியானாவில் கூட்டணி இல்லையா?

Siva
புதன், 11 செப்டம்பர் 2024 (17:56 IST)
அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

90 தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்திற்கு வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாளை வேட்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பூபிந்தர் சிங் ஹூடா என்பவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளதை அடுத்து காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக அரியானா மாநிலத்தில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி  இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி வழக்கு விசாரணையை வேகப்படுத்த வேண்டும்: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்.. விஜய்யின் புதிய அறிக்கை..!

சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: பிரசாந்த் கிஷோர் அறிவிப்பால் பரபரப்பு..!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பெண்ணின் முன்ஜாமீன் மனு: நீதிபதி அதிரடி உத்தரவு..!

இனி நிலத்தடி நீரையும் குடிக்க முடியாதா? ஆபத்தான அளவில் நைட்ரேட் கலப்பு! - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments