Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தியை சந்தித்தார் நடிகை குஷ்பு

Webdunia
வியாழன், 27 நவம்பர் 2014 (15:19 IST)
காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார்.
 
நடிகை குஷ்பு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை, டெல்லியில் இன்று சந்தித்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் முன்னாள் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி.ரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 
சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது. இந்தத் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
 
பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் இன்று கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Show comments