Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ஆதரவு, வயநாட்டில் எதிர்ப்பு: பரிதாபத்தில் கம்யூனிஸ்ட்

Webdunia
வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (09:15 IST)
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளது. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் அதே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவில் எதிரெதிர் கட்சியாக உள்ளது. குறிப்பாக ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவரை தோற்கடிக்க கம்யூனிஸ்ட் தீவிரமாக உள்ளது
 
ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர் என்று முழக்கமிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, ராகுல்காந்தியை வயநாடு தொகுதியில் தோற்கடிக்க வேலை செய்வது முரண்பாட்டின் உச்சமாக இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த இரட்டை நிலைபாட்டால் தமிழகத்திலும் கேரளாவிலும் பிரச்சாரம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேசிய கட்சிகளில் ஒன்றாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் ஒரேவித நிலையை கையாண்டால்தான் அந்த கட்சி மக்களின் நம்பகத்தன்மையை பெற முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments