Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு- இணை அமைச்சர் சர்ச்சை பேச்சு

Sinoj
செவ்வாய், 19 மார்ச் 2024 (19:26 IST)
பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புடன் தமிழர்களை தொடர்பு  என  மத்திய இணை அமைச்சர் ஷோபா பேசியது சர்ச்சையாகியுள்ளது.
 
அண்மையில்   கர்நாடக மாநிலம் பெங்களூரு உணவகத்தில் குண்டுவெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சமீபத்தில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் திடீரென வெடித்த வெடிகுண்டு காரணமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது.
 
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு ஏஜென்சி என்.ஐ.ஏ மற்றும் பெங்களூரு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில்  இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான குற்றவாளி தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
மத்திய உளவுத்துறை அதிகாரிகள் குண்டு வெடித்த இடத்தில் சோதனை செய்ததாகவும் இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில்,   வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அந்த ஓட்டலில் ரவா இட்லி சாப்பிட்டு விட்டு, தான் கொண்டு வந்த பையை அங்கேயே வைத்துவிட்டு சென்றார். அந்த பையில் இருந்துதான்  வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இது உறுதியான நிலையில், முகக்கவசம் அணிந்து வந்த நபரின்  புகைப்படத்தை வெளியிட்டு,  இந்த நபரைக் கைது செய்வதற்கு முக்கிய தகவல்களை அளித்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,  அறிவித்தது.
 
மேலும், ஷாஹித் கான் என்ற பெயரில் வந்த இமெயில் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் இண்று ஜவுளி வியாபாரி ஒருவரை கைது செய்த நிலையில், சமீபத்தில் பெல்லாரியை சேர்ந்த ஷமீர் என்ற நபரை போலீஸார் கைது செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து வந்தவர் யாரோ பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வைத்துவிட்டு சென்றுவிட்டார் என்று மத்திய இணை அமைச்சர்  சோபா கரந்தலஜே பேசியது  சர்ச்சையாகியுள்ளது. 
 
குற்றவாளி இன்னும் கைது  செய்யப்படாத நிலையில் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஓட்டலில் குண்டு வைத்ததாக ஷோபா கரந்தலஜே பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

அடுத்த கட்டுரையில்
Show comments