Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தாலும் சிலிண்டர் விலை குறைப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 1 ஏப்ரல் 2024 (06:52 IST)
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலை குறித்த மாற்றம் அறிவிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கும் இந்த அறிவிப்பை பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த மாதம் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை 30 ரூபாய் குறைந்ததை அடுத்து ரூ.1930க்கு சிலிண்டர் விலை விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இல்லத்தரசிகள் பயன்படுத்தும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments