Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி கடித்ததில் கோமாவில் இருந்த நோயாளி உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (13:28 IST)
அரசு மருத்துவமனையில் கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை அரசு மருத்துவமனையில்  பர்மிந்தர் குப்தா(27) என்ற இளைஞர் விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். விபத்து ஏற்பட்டு மூளையில் ரத்தம் உறைந்து விட்டதால், கோமா நிலைக்கு சென்றார்.
 
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் பொது வார்டிற்கு மாற்றப்பட்டார்.  மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான எலிகள் இருப்பதாக, குப்தாவின் தந்தை, மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கோமாவில் இருந்த குப்தாவின் கண்களை, எலிகள் கடித்துள்ளன. இதனால் அவரது கண்களில் அதிக ரத்தம் வந்துள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த குப்தா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அலட்சியத்தால், நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments