Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி முறைகேடு வழக்கு: முன்னாள் முதல்வர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (10:49 IST)
இந்தியாவின் முக்கிய ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஒன்றான நிலக்கரி முறைகேடு வழக்கு கடந்த சில ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது

இந்த தீர்ப்பின்படி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உட்பட 6 பேர் குற்றவாளி என டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கவிருப்பதாக டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்ஹாரா என்ற பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில் மிகப்பெரிய அளவில்  முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சி.பி.ஐ. இதுகுறித்து விசாரணை செய்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமைசெயலர் ஏ.கே. பாசு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments